வனப்பகுதியில் சேர்க்கப்பட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனமாக மாற்ற வேண்டும்


வனப்பகுதியில் சேர்க்கப்பட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனமாக மாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 12 Jun 2021 12:44 AM IST (Updated: 12 Jun 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி, ஆனைமலையில் வனப்பகுதி யில் சேர்க்கப்பட்ட பகுதிகளை பாதுகாக்கப் பட்ட வனமாக மாற்ற வேண்டும் என்று அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்து உள்ளனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, ஆனைமலையில் வனப்பகுதி யில் சேர்க்கப்பட்ட பகுதிகளை பாதுகாக்கப் பட்ட வனமாக மாற்ற வேண்டும்  என்று அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்து உள்ளனர்.

பெருமாள்சாமி கரடு

பொள்ளாச்சி அருகே ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட ஒடைகுளம் பகுதியில் மலை உச்சியில் பெருமாள்சாமி கரடு என அழைக்கப்படும் சேனைக்கல்ராயர் பெருமாள் கோவில் உள்ளது. 

இந்த குன்று 1500 அடி உயரம் கொண்டது. 701 படிக்கட்டுகள் கொண்ட இந்த மலை உச்சியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சேனைக்கல்ராயர் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். 

இங்கு ஆங்கிலேயர் காலத்தில் திப்புசுல்தானின் ஒரு படைப்பிரிவினர் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் தங்கும் அறை, சமையல், குதிரைகளை கட்டி வைக்கும் பகுதி ஆகியவை இன்னும் உள்ளன.

 கோட்டையின் நுழைவு வாயில் இன்னும் பழமை மாறாமல் அப்படியே உள்ளது. இதை தவிர 2 குகை வழித்தடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. 

39.35 எக்டர் சேர்ப்பு 

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள் கண்டுபிடிக்கப்பட்டது. அவை தற்போது தொல்பொருள் அருங்காட்சி யத்தில் வைக்கப்பட்டு உள்ளன. 

இந்த நிலையில் பெருமாள்கரடு உள்பட 39.35 எக்டர் நிலங்கள் தற்போது வனப்பகுதியுடன் சேர்த்து கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டு உள்ளார். 

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் அறிவுரையின் பேரில் பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில் வருவாய் துறை கட்டுப்பாட்டில் இருந்த 39.35 எக்டர் நிலம் புறம்போக்கு காடுகளாக மாற்ற வேண்டும் கோவை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 

கலெக்டர் உத்தரவு 

அதன்படி புறம்போக்கு காடுகளாக மாற்றி கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

 பொள்ளாச்சி தாலுகாவில் மரக்கிடங்கு வளாகம் 2.552 எக்டர், ஜமீன் ஊத்துக்குளி குடியிருப்பு 2.025 எக்டர், ஆனைமலை தாலுகாவில் ஒடையகுளம் பேரூராட்சி பெருமாள்சாமி கரடு 34.78 எக்டர் நிலங் களை வனச்சட்டம் 1882 பிரிவு 26-கீழ் புறம்போக்கு காடுகளாக மாற்றி அறிவிக்கப்பட்டு உள்ளது. 

தற்போது இந்த 39.35 எக்டர் நிலம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, அனைத்து வனச்சட்டங்களும் உட்படுத்தப்பட்டு உள்ளன. 

அதன்படி மரம் வெட்டுதல், விலங்குகளை வேட்டையாடுதல், பாறைகளை உடைத்தல், மண் எடுத்தல் ஆகியவை தடை செய்யப் படுகிறது.
 
அரசுக்கு பரிந்துரை 

மேலும் இந்த நிலங்களை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை மாற்ற தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. 

பெருமாள்சாமி கரடு வனப்பகுதியுடன் சேர்க்கப்பட்டாலும், தற்போது கோவிலில் மேற் கொள்ளப்பட்டு வரும் வழக்கமான நடைமுறைகள் தொடரும். 

இதேபோன்று மீதமுள்ள ஆனைமலை பண்ணை, சேத்துமடை பகுதிகளை புறம்போக்கு காடுகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 இதற்கிடையில் வால்பாறை தாலுகா வில் உட்பட்ட 142.52 எக்டர் நிலத்தினை ஏற்கனவே புறம்போக்கு காடுகளாக மாற்றி ஏற்கனவே ஆணை பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story