கொரோனாவுக்கு மேலும் 11 பேர் பலி


கொரோனாவுக்கு மேலும் 11 பேர் பலி
x
தினத்தந்தி 11 Jun 2021 7:37 PM GMT (Updated: 11 Jun 2021 7:37 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் 105 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்:

105 பேருக்கு தொற்று
அரியலூர் மாவட்டத்தில் நேற்று அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய நகராட்சி பகுதிகளில் தலா 5 பேரும், தா.பழூர், ஜெயங்கொண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தலா 16 பேரும், திருமானூர் ஒன்றிய பகுதியில் 10 பேரும், செந்துறை ஒன்றிய பகுதியில் 13 பேரும், அரியலூர் ஒன்றிய பகுதியில் 12 பேரும், ஆண்டிமடம் ஒன்றிய பகுதியில் 8 பேரும், வெளி மாவட்டங்களில் இருந்து வசிப்பவர்களில் 20 பேரும் என மொத்தம் 105 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 13,430 ஆக உயர்ந்துள்ளது.
10 பேர் பலி
இதில் 158 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 35, 60, 65, 80, 60 வயதுடைய 5 ஆண்களும், 44, 65, 60, 42, 70 வயதுடைய 5 பெண்களும் என 10 பேரும், தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரும் என மொத்தம் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சையில் 1,283 பேர்
மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 11,978 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,283 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 1,162 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது.
மாவட்டத்தில் நேற்று 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் 105 பேருக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி 2-வது டோசும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 65 பேருக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி முதல் டோசும் போடப்பட்டுள்ளது. கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் யாருக்கும் போடப்படவில்லை.

Next Story