சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதாக 16 பேர் மீது வழக்கு


சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதாக 16 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 12 Jun 2021 1:08 AM IST (Updated: 12 Jun 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

மீன்சுருட்டி அருகே சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதாக 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

மீன்சுருட்டி:

ஊர்க்கூட்டம்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமு(வயது 42). இவரும், அவர் சார்ந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் குடியிருந்து, விவசாயம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அமாவாசையை முன்னிட்டு ஊர்க்கூட்டம் போட்டதாக தெரிகிறது. இதில், வெண்ணங்குழி கிராமத்தை சேர்ந்த சிலரிடம், அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நிலங்களை அடமானம் வைத்து உள்ளனர். அதை அடமானம் பெறுபவர்கள் தங்களின் பெயரில் பட்டா மாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஒருவரிடம் நிலத்தை விற்கக்கூடாது என்றும் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளனர்.
16 பேர் மீது வழக்கு
இதை அறிந்த வெண்ணங்குழி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன், குமார் என்ற மோகன்குமார், அசோக் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் வீரசிங்கம்(65), பாலு(62), மீனாட்சிசுந்தரம்(41), கவுதம், சதீஷ் குமார், ராஜ்(47), சந்தோஷ், விமல்நாதன்(43), சந்துரு, அப்பு என்ற செல்வராஜ்(45), செந்தில், வெள்ளையன் என்ற ராஜசுந்தரம் மற்றும் கணேசன் உள்ளிட்ட 16 பேரும் சேர்ந்து, ராமு, ஆனந்த், சஞ்சய் மற்றும் ராஜபாண்டியன் ஆகியோரை சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதாகவும், வீடு, கார், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கடை ஆகியவற்றை அடித்து சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராமு கொடுத்த புகாரின்பேரில் 16 பேர் மீது, ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் வழக்குப்பதிவு செய்து, வீரசிங்கம், பாலு, மீனாட்சிசுந்தரம், குமார் என்ற மோகன்குமார், சதீஷ்குமார், ராஜ், விமல்நாதன், அப்பு என்ற செல்வராஜ் ஆகிய 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story