கொரோனா பரிசோதனை முகாம்


கொரோனா பரிசோதனை முகாம்
x
தினத்தந்தி 12 Jun 2021 1:08 AM IST (Updated: 12 Jun 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூர் அருகே மடப்புரம் பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

வள்ளியூர்:
வள்ளியூர் அருகே மடப்புரம் பகுதியில் கொரோனா நோய் தொற்று கண்டறியும் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோலப்பன் தலைமை தாங்கினார். துலுக்கர்பட்டி மருத்துவ அலுவலர் டாக்டர் ப்ரீத்தா முன்னிலையில் மடப்புரத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் முன் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. பின்னர் அப்பகுதி மக்களுக்கு அச்சம்பாடு ஊராட்சி செயலாளர் பாதுஷா கபசுர குடிநீர் வழங்கினார். முகாமில் மடப்புரம் பகுதிமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் துலுக்கர்பட்டி சுகாதார ஆய்வாளர் மூக்காண்டி, ஆய்வக தொழில்நுட்பனர் சர்மிளா, பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அச்சம்பாடு பஞ்சாயத்து அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்க தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story