விக்கிரமசிங்கபுரத்தில் 31 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்


விக்கிரமசிங்கபுரத்தில் 31 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Jun 2021 1:15 AM IST (Updated: 12 Jun 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரத்தில் 31 ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் கஸ்பா வாணியர் தெருவில் ஒரு வாலிபர் 31 மூட்டை ரேஷன் அரிசியுடன் தனது மோட்டார் சைக்கிளில் நிற்பதாக விக்கிரமசிங்கபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவதாணு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை பிடித்தனர். விசாரணையில், அம்ைப கோவில்குளம் ஊரைச்சேர்ந்த துரை குட்டி என்பவருடைய மகன் கார்த்திக் (வயது 23) என்பதும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வீடு வீடாக ரேஷன் அரிசியை வாங்கி ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 31 மூட்டை ரேஷன் அரிசியையும் கைப்பற்றி நெல்லையில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர்.

Next Story