அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை


அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 12 Jun 2021 1:29 AM IST (Updated: 12 Jun 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூரில் உள்ள மாரியம்மன் கோவிலி்ல் சிறப்பு பூஜை நடந்தது.

சாத்தூர், 
சாத்தூர் முக்குராந்தலில் உள்ள மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது கொரோனா தாக்கம் குறையவும் தொற்றில் இருந்து அனைவரும் விடுபட்டு நலமுடன் வாழ வேண்டியும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், தேன், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் இன்றி சிறப்பு வழிபாடு நடந்தது. 


Next Story