பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்


பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2021 8:00 PM GMT (Updated: 11 Jun 2021 8:00 PM GMT)

விருதுநகரில் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.

விருதுநகர், 
தமிழக அரசு பத்திர பதிவு அலுவலகம் கொரோனா வழிகாட்டலுடன் செயல்பட அனுமதி அளித்துள்ள நிலையில் இந்த அலுவலக செயல்பாட்டிற்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஆவண எழுத்தர், முத்திரைத்தாள் விற்பனையாளர் மற்றும் ஜெராக்ஸ் நகல் எடுப்பவர்களது அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளிக்கவில்லை. இதனால் பத்திரப்பதிவுஅலுவலக செயல்பாடு முழுமையாக நடைபெறாத நிலை உள்ளது. விருதுநகரில் இந்த அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படாத நிலையில் நேற்று ஆவண எழுத்தர் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் இதுகுறித்து மனு கொடுத்து தங்கள் அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளிக்குமாறு கோரினர். ஆனாலும் உரிய அனுமதி அளிக்கப்படாத நிலையில் நேற்று ஆவண எழுத்தர் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி மற்றும் போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பதிவு செய்துள்ள ஆவண எழுத்தர் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர் பட்டியலை பெற்று இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய முடிவு எடுப்பதாக தெரிவித்தை தொடர்ந்து முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

Next Story