காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2021 1:30 AM IST (Updated: 12 Jun 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அசோகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

சிவகாசி, 
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அசோகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். 
சிவகாசி 
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிவகாசி காரனேசன் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  ஆர்ப்பாட்டத்துக்கு அசோகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் நகர தலைவர் குமரன், வட்டார தலைவர் பைபாஸ் வைரம், முன்னாள் கவுன்சிலர் சேர்மத்துரை, மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் அமல்ராஜ், பாறைப்பட்டி முருகன், முத்துசெல்வம், மான்ராஜ், கலைச்செல்வம், கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் நாரணாபுரம் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் முன்பு ஒன்றிய கவுன்சிலர் ஜீ.பி.முருகன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். 
திருத்தங்கல்
மாணவர் காங்கிரஸ் சார்பில் குறுக்குபாதையில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர் சின்னதம்பி, தொழிற்சங்க மாவட்ட தலைவர் மல்லீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருத்தங்கலில் நடைபெற்ற போராட்டத்தில் நகர தலைவர் மாரீஸ்வரன், துணைத்தலைவர் செந்தில் வேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணல் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். சாட்சியாபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர் சங்கர்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அருப்புக்கோட்டை 
அருப்புக்கோட்டையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வேணுகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர தலைவர் லட்சுமணன், மத்திய தொலைத்தொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் ஜோதிமணி, மூத்த நிர்வாகி அய்யனார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
அதேபோல வத்திராயிருப்பு அருகே கோட்டையூர் பகுதியில் நடைெபற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் துணைத்தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். 
வெம்பக்கோட்டை 
வெம்பக்கோட்டை கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் வட்டார தலைவர் காளியப்பன் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார துணைத்தலைவர் பால்ச்சாமி, தலைமை கழக பேச்சாளர் சிப்பிபாறை ராமர், வட்டார செயலாளர் கருப்பையா மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 
திருச்சுழி 
திருச்சுழியில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு ஓ.பி.சி. மாவட்ட தலைவர் உலக்குடி செல்வம் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சங்கர்போஸ், துரைப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர்கள் புஸ்பநாதன், பொன்னையா, மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story