தென்னை மரங்களை சேதப்படுத்திய யானை
ராஜபாளையம் அருகே தென்னை மரங்களை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே தென்னை மரங்களை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மலை அடிவாரம்
ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான ராக்காச்சி அம்மன் கோவில் பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு தென்னை, மா ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக யானைகள் தோப்புக்குள் வருவதும், அவ்வாறு வரும் போது தென்னை மரங்களை சேதப்படுத்தி செல்வதும் வழக்கம்.
யானை அட்டகாசம்
இந்தநிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த ஸ்ரீராம் விஜய் என்பவருக்கு சொந்தமான தோப்பில் புகுந்த யானை 5 பெரிய தென்னை மரங்களை சாய்த்து சேதப்படுத்தியதுடன், 2 சிறிய மரங்களின் குருத்துக்களை தின்றும் அட்டகாசம் செய்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
நாங்கள் 12 ஆண்டுகள் தென்னையை வளர்த்து பாதுகாத்து செலவழித்து ஒரே நாளில் ஒன்றுமில்லாமல் ஆகி விட்டது.
வனத்துறை அதிகாரிகள்
இவ்வாறு யானைகளின் அட்டகாசம் தொடர்வதால் நாளுக்கு நாள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம்.
எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மேற்கண்ட பகுதியை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்குவதுடன், யானை தாக்குதலில் இருந்து விவசாய நிலங்களை பாதுகாக்க முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story