பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2021 1:38 AM IST (Updated: 12 Jun 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கரூர்
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் கோவை ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். ஜோதிமணி எம்.பி. மத்திய அரசை கண்டித்து பேசினார். இந்தியாவில் மட்டுமே பெட்ரோல், டீசலுக்கு வரி அதிகம் என்றார். இதேபோல, வெங்கமேடு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் கட்சியின் நகர தலைவர் ஸ்டீபன்பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story