கஞ்சா விற்ற 4 பேர் கைது


கஞ்சா விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2021 1:40 AM IST (Updated: 12 Jun 2021 1:40 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சுரண்டை:
சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் போலீசார் சாம்பவர்வடகரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஊர்மேலழலகியான் குளத்து கரையில் சென்றபோது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களை சோதனை செய்ததில், 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. 

போலீசார் விசாரணையில், அவர்கள் செங்கோட்டை அருகே கற்குடி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் கணேஷ்குமார் (வயது 28), சாம்பவர்வடகரையை சேர்ந்த சபரி ஆனந்த் (25), அதே பகுதியை சேர்ந்த இசக்கி என்ற குட்டிராஜ் (24), சங்கரன்கோவில் அருகே உள்ள சங்குபுரத்தை சேர்ந்த மனோஜ் (24) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Next Story