நிவாரண உதவி கேட்டு தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் மனு


நிவாரண உதவி கேட்டு தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் மனு
x
தினத்தந்தி 12 Jun 2021 1:44 AM IST (Updated: 12 Jun 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

நிவாரண உதவி கேட்டு தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் மனு கொடுத்தனர்.

தென்காசி:
தென்காசி மாவட்ட இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி நலச்சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கோமதி சங்கர் தலைமையில் ஆட்டோ தொழிலாளர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கால் ஆட்டோ தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். தினமும் ஆட்டோ ஓடினால் தான் ஆட்டோ டிரைவர்களின் குடும்பத்தினர் உணவு உண்ண முடியும் என்ற நிலையில் இருக்கிறோம். தற்போது 2-வது ஆண்டாக மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே எங்களுக்கு பொது முடக்கம் முடிவடையும் வரை மாதம்தோறும் தலா ரூ.5 ஆயிரம் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும். மேலும் வாகனங்களின் இன்சூரன்ஸ், வரி, பெர்மிட் மற்றும் எப்.சி. கட்டணத்தை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். வாகனங்களின் மீது பெறப்பட்டுள்ள மாத கடன் தொகையை செலுத்த ஊரடங்கு முடியும்வரை விலக்கு அளிக்க வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள் மற்றும் பதிவு செய்யாதவர்கள் அனைவருக்கும் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
அப்போது இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் பால்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, செங்கோட்டை நகர தலைவர் மூர்த்தி, இந்து ஆட்டோ முன்னணி பொறுப்பாளர்கள் மணி, பாலமுருகன், தங்கராஜ், பேச்சி, அருணாச்சலம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story