சேலம் மாவட்டத்தில் 916 பேருக்கு கொரோனா பாதிப்பு 13 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 916 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 13 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 916 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 13 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
916 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு ஓரளவு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 945 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 916 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 219 பேர், தாரமங்கலத்தில் 67 பேர், சேலம் ஒன்றியத்தில் 55 பேர், ஓமலூரில் 52 பேர், வீரபாண்டியில் 44 பேர், சங்ககிரியில் 43 பேர், நங்கவள்ளியில் 39 பேர், எடப்பாடியில் 37 பேர், கொளத்தூரில் 35 பேர், ஆத்தூரில் 30 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 29 பேர், வாழப்பாடியில் 27 பேர், அயோத்தியாப்பட்டணம், மகுடஞ்சாவடி ஆகிய பகுதிகளில் தலா 26 பேர், மேட்டூரில் 24 பேர், பனமரத்துப்பட்டியில் 20 பேர், காடையாம்பட்டியில் 19 பேர், ஏற்காட்டில் 17 பேர், மேச்சேரியில் 14 பேர், கெங்கவல்லியில் 13 பேர், தலைவாசலில் 9 பேர், கொங்கணாபுரத்தில் 8 பேர், நரசிங்கபுரத்தில் 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
77 ஆயிரத்தை தாண்டியது
சேலம் மாவட்டத்துக்கு நாமக்கல்லில் இருந்து வந்த 11 பேர், சென்னை, ஈரோட்டில் இருந்து வந்த தலா 10 பேர், கடலூரில் இருந்து வந்த 9 பேர், தர்மபுரியில் இருந்து வந்த 8 பேர், கள்ளக்குறியிச்சியில் இருந்து வந்த 6 பேர், கிருஷ்ணகிரியில் இருந்து வந்த 4 பேர், வேலூரில் இருந்து வந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆயிரத்து 583 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,281 பேர் குணமடைந்துவிட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 9 ஆயிரத்து 799 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
13 பேர் பலி
சேலத்தை சேர்ந்த ஒரு பெண் உள்பட 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 214 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story