சேலத்தில் ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு


சேலத்தில் ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு
x

சேலத்தில் குருவிப்பனை ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம்:
சேலத்தில் குருவிப்பனை ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குருவிப்பனை ஏரி
சேலம் அம்மாப்பேட்டை அருகே குருவிப்பனை ஏரி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஏரிக்கு தற்போது தண்ணீர் அதிகம் வரத்தொடங்கி உள்ளது. இதனால் ஏரியில் நீர்மட்டம் உயர தொடங்கியது. இந்த ஏரியில் மீன்கள் அதிகளவில் வளர்க்கப்படுகிறது.
நேற்று காலை ஏரி பகுதிக்கு வந்த பொதுமக்கள் ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த அம்மாபேட்டை போலீசார், ஏரி பகுதிக்கு வந்து பொதுமக்களை கலைந்து போக செய்தனர்.
பரபரப்பு
ஏரி பகுதியில் வசிக்கும் சிலர் சாயக் கழிவு நீரை ஏரியில் விடுவதாகவும், இன்னும் சிலர் வீட்டு கழிவு நீரையும், சாக்கடை கழிவு நீரையும் ஏரியில் விடுவதாலும் மீன்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சேலம் மாநகராட்சி அதிகாரிகளும், மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளும் ஏரி பகுதியை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story