மேலும் 5,500 டோஸ்கள் வந்தன: 3 நாட்களுக்கு பிறகு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது


மேலும் 5,500 டோஸ்கள் வந்தன: 3 நாட்களுக்கு பிறகு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
x
தினத்தந்தி 12 Jun 2021 4:02 AM IST (Updated: 12 Jun 2021 4:02 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்துக்கு மேலும் 5500 டோஸ்கள் வந்ததால் கடந்த 3 நாட்களுக்கு பிறகு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

சேலம்:
சேலம் மாவட்டத்துக்கு மேலும் 5.500 டோஸ்கள் வந்ததால் கடந்த 3 நாட்களுக்கு பிறகு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தட்டுப்பாடு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுபாடு ஏற்பட்டது. கடந்த 8-ந் தேதி முதல் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.
5,500 தடுப்பூசி மருந்துகள்
இந்த நிலையில் சென்னையில் இருந்து நேற்று காலை சேலம் மாவட்டத்துக்கு 5,500 கோவேக்சின் தடுப்பூசி டோஸ்கள் வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டன. அந்த தடுப்பூசி  மாநகராட்சி மற்றும் ஒன்றியங்களுக்கு உடனடியாக பிரித்து கொடுக்கப்பட்டன.
டந்த 3 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. நேற்று மட்டும் 2,100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 3,400 மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story