கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பு: 7,864 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிப்பு சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்


கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பு: 7,864 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிப்பு சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 12 Jun 2021 4:02 AM IST (Updated: 12 Jun 2021 4:02 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 7 ஆயிரத்து 864 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 7 ஆயிரத்து 864 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா பரிசோதனை
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 900-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு தினமும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை 10 லட்சத்து 42 ஆயிரத்து 430 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில் 76 ஆயிரத்து 656 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இவர்களில் 65 ஆயிரத்து 288 பேர் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 10 ஆயிரத்து 168 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தனிமைப்படுத்தி கண்காணிப்பு
கொரோனாவுக்கு மாவட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக 20-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர். இதுவரை ஆயிரத்து 200 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மாவட்டத்தில் ஆரம்பத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகளவு இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு படிபடியாக குறைந்து வருவதாக 97 இடங்கள் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த இடங்களில் 1,924 வீடுகள் உள்ளன. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 7 ஆயிரத்து 864 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை அதிகாரிகளால் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதுதவிர கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியே வருவதை தடுக்கவும், வெளியாட்கள் அங்கு செல்வதை தடுக்கவும் தடுப்பு கட்டைகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story