திருக்குவளை, கீழ்வேளூர் அரசு மருத்துவமனைகளில் கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு
திருக்குவளை, கீழ்வேளூர் அரசு மருத்துவமனைகளில் கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு செய்தார்.
வேளாங்கண்ணி,
திருக்குவளை, கீழ்வேளூர் அரசு மருத்துவமனைகளை நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
கொரோனா தொற்று பரவல் 2-வது மற்றும் 3-வது அலையை தடுக்க தாலுகா அளவில் உள்ள மருத்துவமனைகளை தரம் உயர்த்த தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. அடுத்த கட்டமாக 3-வது அலை வந்தால் அனைத்து தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளையும் பலப்படுத்தும் விதமாக கீழ்வேளூர் மற்றும் திருக்குவளையில் உள்ள அரசு மருத்துவமனைகளையும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
கீழ்வேளூர், திருக்குவளை அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகளில் கண், பல் மற்றும் விபத்து அவசர சிகிச்சை உள்ளிட்ட வசதிகள் தரம் உயர்த்த நிதி பெற கருத்துரு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது நாகை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் மகேந்திரன், தலைமை மருத்துவ அலுவலர் தீபக்குமார், பொதுப்பணித்துறை பொறியாளர் ரஞ்சித், திருப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் அருண்பதி, திருக்குவளை தாசில்தார் சிவக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story