கொரோனா தடுப்பூசிபோடும் பணி


கொரோனா தடுப்பூசிபோடும் பணி
x
தினத்தந்தி 12 Jun 2021 7:38 PM IST (Updated: 12 Jun 2021 7:38 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசிபோடும் பணி நடந்தது.

முதுகுளத்தூர், 
மாவட்டத்தில் கொரோனோ தடுப்பூசி இருப்பு இல்லாததால் அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், முகாம்கள் ஆகியவற்றில் போடப்பட்டு வந்த தடுப்பூசி போடும் பணிகள் ஜூன் 7-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டன இதனால் தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இநத்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கோவாசக்சின் தடுப்பூசி வந்ததை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கியது. இதில் 2-வது தவணை தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டன. அந்த வகையில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டன. முதுகுளத்தூர் டி.இ.எல்.சி உயர்நிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள சிறப்பு முகாமில் இளைஞர்கள் மற்றும் பெரிய வர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Next Story