போலி டாக்டர்களுக்கு உதவிய 2 பேர் கைது


போலி டாக்டர்களுக்கு உதவிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2021 7:56 PM IST (Updated: 12 Jun 2021 7:56 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே போலி டாக்டர்களுக்கு உதவிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் மேல்மலை பகுதியில் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டனர். இதனை பயன்படுத்தி போலியாக சிலர் மருத்துவம் பார்ப்பதாக சுகாதாரத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 அதன்பேரில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அரவிந்த் கொடுத்த புகாரின் பேரில் கடந்த மாதம் போலி டாக்டர்கள் 2 பேரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர். 

இதற்கிடையே அவர்களுக்கு உதவியாக இருந்ததாக சிலர் மீது, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அவர்களை பிடிக்க கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் உத்தரவு பிறப்பித்தார். 

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மேல்மலை கிராமத்தின் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினர்.

இதில் பூம்பாறை கிராமத்தில் போலியாக மருத்துவம் பார்த்த டாக்டர்களுக்கு உதவியாக இருந்த அப்பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 57), கேரள மாநிலம் பத்தனம் திட்டாவை சேர்ந்த சந்தோஷ் (45) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-------

Next Story