வருகிற 21-ந்தேதி முதல் ஜமாபந்தி


வருகிற 21-ந்தேதி முதல் ஜமாபந்தி
x
தினத்தந்தி 12 Jun 2021 8:12 PM IST (Updated: 12 Jun 2021 8:12 PM IST)
t-max-icont-min-icon

9 தாலுகாக்களில் வருகிற 21 ந்தேதி முதல் ஜமாபந்தி நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

ராமநாதபுரம், ஜூன்.13-
9 தாலுகாக்களில் வருகிற 21-ந்தேதி முதல் ஜமாபந்தி நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
ஜமாபந்தி
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாவிலும் வருகிற 21-ந் தேதி முதல் 29-ம் தேதி வரை தாலுகா அலுவலகங்களில் இந்த ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நடைபெற உள்ளது. 
பரமக்குடி தாலுகாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் தலைமையில் 21-ந்தேதி முதல் 7 நாட்களும், திருவாடனை தாலுகாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவகாமி தலைமையில் 21-ந்தேதி முதல் 4 நாட்களும், கீழக்கரை தாலுகாவில் ராமநாதபுரம் சப்-கலெக்டர் தலைமையில் 21-தேதி முதல் 3 நாட்களும், கமுதி தாலுகாவில் பரமக்குடி ஆர்.டி.ஓ.தங்கவேல் தலைமையில் 21-ந்தேதி முதல் 5 நாட்களும் நடைபெற உள்ளது.
முதுகுளத்தூர் தாலுகாவில் ஆயத்துறை உதவி ஆணையர் தலைமையில் 21-ந்தேதி முதல் 6 நாட்களும், கடலாடி தாலுகாவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையில் 21-ந்தேதி முதல் 6 நாட்களும், ராமநாதபுரம் தாலுகாவில் கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் தலைமையில் 21-ந்தேதி முதல் 4 நாட்களும், ராஜசிங்க மங்கலம் தாலுகாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் 21-ந்தேதி முதல் 3 நாட்களும், ராமேசுவரம் தாலுகாவில் மண்டபம் முகாம் துணை கலெக்டர் தலைமையில் 21-ந்தேதி அன்று ஒரு நாள் மட்டும் என முறையே நடைபெறும். 
மனு
சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ஜமாபந்தி நடைபெறாது.ஜமாபந்தியில் மனு அளிக்க பொதுமக்கள் நேரில் வரவேண்டாம். கோரிக்கை தொடர்பான மனுக்களை https://gdp.tn.gov.in/jamabandhi இணையதளம் அல்லது இ-சேவை மையங்கள் மூலமாக ஜூலை 31-ந்தேதி வரை பதிவு செய்யலாம். இவ்வாறு பெறப்படும் மனுக்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படும்.மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

Next Story