திண்டுக்கல் மாவட்டத்தில் 21 பேர் கொரோனாவுக்கு பலி


திண்டுக்கல் மாவட்டத்தில் 21 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 12 Jun 2021 8:54 PM IST (Updated: 12 Jun 2021 8:54 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் 21 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 491 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். இந்தநிலையில் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 21 பேர் பலியாகினர். இதில் 7 பெண்களும் அடங்குவர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 17 பேரும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் ஒருவரும், திண்டுக்கல் மற்றும் மதுரையை சேர்ந்த 3 தனியார் மருத்துவமனைகளில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். 
மேலும் இறந்தவர்களில் 36 வயது பெண் மற்றும் 50 வயதுக்கு மேல் 60 வயதுக்குள் 9 பேரும், 60 வயதுக்கு மேல் 70 வயதுக்குள் 8 பேரும், 70 வயதுக்கு மேல் 3 பேரும் அடங்குவர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 512 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே மாவட்டத்தில் நேற்று 32 பெண்கள் உள்பட மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்து 152 ஆக அதிகரித்தது. அதேநேரம் நேற்று 246 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 1,800 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story