தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 12 பேர் பலி
தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 12 பேர் பலியாகினர்.
தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று 12 பேர் பலியாகினர். அதன்படி, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த பெரியகுளத்தை சேர்ந்த 62 வயது முதியவர், ஓடைப்பட்டியை சேர்ந்த 56 வயது ஆண், ஆண்டிப்பட்டியை சேர்ந்த 54 வயது பெண், கம்பத்தை சேர்ந்த 75 வயது முதியவர், அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த 74 வயது முதியவர், மாவட்டத்தின் பிற பகுதிகளை சேர்ந்த 60, 65 வயது முதியவர்கள், 55, 50 வயது ஆண்கள், 65, 60 வயது மூதாட்டிகள், 51 வயது பெண் ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும் மாவட்டத்தில் நேற்று 219 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்து 543 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டவர்களில் 762 பேர் நேற்று குணமடைந்தனர். தற்போது இந்த வைரஸ் பாதிப்புடன் 2 ஆயிரத்து 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story