மாவட்ட செய்திகள்

பி.ஏ.பி. பாசனத்திட்ட வாய்க்கால்களை ஆய்வு செய்து அதன் கரைகளில் சேதமடைந்துள்ள மண்பாதையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். + "||" + pap vaikkal

பி.ஏ.பி. பாசனத்திட்ட வாய்க்கால்களை ஆய்வு செய்து அதன் கரைகளில் சேதமடைந்துள்ள மண்பாதையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தளி
பி.ஏ.பி. பாசனத்திட்ட வாய்க்கால்களை ஆய்வு செய்து அதன் கரைகளில் சேதமடைந்துள்ள மண்பாதையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சேதமடைந்த பாதை
வாழ்க்கை ஆனாலும் வயலானாலும் சரியான பாதை அமையவில்லை என்றால் பயனற்றதாகி விடும். மனிதன் அமைத்துக்கொள்ளும் சரியான பாதை அவனை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச்செல்வது போன்று நிலத்திற்கு சரியான பாதை அமைந்தால் மட்டுமே சாகுபடியில் சாதிக்க முடியும். இவை அனைத்திற்கும் மேலாக நீர்மேலாண்மையை திறம்பட செயல்படுத்துவதற்கு வாய்க்கால்களின் கரையில் அமைக்கப்பட்டுள்ள பாதை முக்கிய பங்கு வகிக்கிறது. 
பி.ஏ.பி. பாசனத்திட்டத்தின் உயிர்நாடியாக திருமூர்த்தி அணை விளங்குகிறது என்றால் அது இன்றளவும் உயிர்ப்போடு உள்ளதற்கு கால்வாய்களின் பங்கும் முக்கியமானதாகும். கால்வாய்கள் கட்டப்பட்டபோதே அதை பராமரிப்பதற்கும் நீர் மேலாண்மையை முறைப்படுத்துவதற்கும் அதன் கரையில் மண்பாதை அமைக்கப்பட்டது. அந்த பாதை எண்ணற்ற விவசாயிகளுக்கும் இன்றளவும் உறுதுணையாகவும் இருந்து வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பாதையற்ற நிலங்களுக்கு செல்வதற்கு வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த விவசாயிகளுக்கு பி.ஏ.பி. பாசனத் திட்டத்தின் கால்வாய்களின் கரையில் அமைக்கப்பட்ட மண்பாதை மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறது. அதை முறையாக பராமரித்து வருவதற்கும், சேதமடைந்தால் சீரமைப்பதற்கும் அதிகாரிகள் முன்வருவதில்லை.
தண்ணீர்திருட்டுக்கு உறுதுணை
இதன் காரணமாக அவை குண்டும், குழியுமாக மாறி வருவதுடன் கற்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது. அதில் செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி கால்வாயில் விழுந்து விடும் சூழல் நிலவுகிறது. அப்போது கால்வாயில் தண்ணீர் சென்றால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புகள் கூட உள்ளது. மேலும் மிக முக்கியமாக பாதை சேமடைந்துள்ளதை சாதகமாகக் கொண்டு கால்வாயில் தண்ணீர் செல்லும் போது குழாய் அமைத்து ஒரு சில விவசாயிகள் இரவில் தண்ணீர் திருடி வருகிறார்கள். 
அதிகாரிகளின் வாகனங்கள் தொலைவில் வரும்போதே அதன் முகப்பு விளக்கு வெளிச்சத்தை கண்டு குழாய்களை எடுத்துச்சென்று விடுகின்றனர். இதனால் தண்ணீர் திருட்டை முழுமையாக தடுப்பதில் பின்னடைவை சந்திக்க வேண்டி உள்ளது. இதன் காரணமாக கடைமடைகளுக்கு முழுமையாக தண்ணீர் சென்றடைவதில்லை. சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீர் பற்றாக்குறையால் கருகி விடுவதால் எண்ணற்ற விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தும் வருகின்றனர்.
சீரமைக்கப்படுமா?
முறையாக பராமரிக்கப்படாத ஒரு பாதை விவசாயத்தை அழிவுக்கு கொண்டு செல்வதுடன் எண்ணற்ற விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கி வருகிறது. தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் பாதை சீரமைக்கப்படாமல் உள்ளதால் அதிகாரிகளே தண்ணீர் திருட்டுக்கு உறுதுணையாக உள்ளனரோ? என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. 
எனவே பி.ஏ.பி. பாசன திட்டத்தில் தண்ணீர் வினியோகத்திற்காக அமைக்கப்பட்ட கால்வாய்களை ஆய்வு செய்து அதன் கரையில் சேதமடைந்துள்ள மண்பாதையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் ஒரு சில வாரங்களில் 4-ம் மண்டல பாசனம் தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக சேதமடைந்த பாதையை மண்கொட்டி சீரமைத்தால் தண்ணீர் திருட்டை தடுப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.