வீட்டிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உபகரணம்


வீட்டிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உபகரணம்
x
வீட்டிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உபகரணம்
தினத்தந்தி 12 Jun 2021 10:17 PM IST (Updated: 12 Jun 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

வீட்டிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உபகரணம்

கோவை

 கொரோனா அறிகுறி ஏற்பட்டால் வீட்டில் இருந்த படியே பரிசோதனை செய்ய வசதியாக ரேபிட் ஆன்டிஜென் டெஸ்டிங் (ஆர்.ஏ.டி.) என்ற கருவி தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) ஒப்புதல் வழங்கி உள்ளது.

அந்த கருவி மூலம் 15 நிமிடங்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்து, முடிவை தெரிந்து கொள்ளலாம். அந்த கருவியின் விலை ரூ.600 ஆகும். புனேயை சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த கருவியை தயாரித்து உள்ளது. 

இது கொரோனா அறிகுறி உள்ளவர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருப்பவர் களும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப் பட்டு உள்ளது.


இந்த கருவியை பயன்படுத்தி நடத்தும் பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் என்றால் பாதிப்பு இருப்பது உறுதி என்றும், ஒருவேளை நெகடிவ் என்றால் உடனே ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அந்த சோதனை முடிவுகள் சர்வரில் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று ஐ.சி.எம்.ஆர். கூறி உள்ளது.

இந்த கருவி மூலம் வீட்டிலேயே பரிசோதனை செய்து கொள்ள, அதற்கான செல்போன் செயலி ஒன்றை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

அதில் கூறி உள்ளபடி சோதனையை மேற்கொள்ள வேண் டும். பரிசோதனை முடிந்த பிறகு அதற்கான முடிவு ஆப்பில் காட்டும். இந்த பரிசோதனை கருவி தற்போது சென்னைக்கு வந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் செந்தில் குமார் கூறுகையில், இந்த கருவி கொண்டு வரப்பட்டது குறித்து சுகாதார துறைக்கு எந்த தகவலும் வரவில்லை. 

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை யில் மட்டுமே 100 சதவீத அளவில் உண்மைத்தன்மை இருக்கும். இந்த கருவியில் தொற்று இருப்பவர்களுக்கு இல்லை என்றும், இல்லாதவர்க ளுக்கு இருப்பதாக கூட முடிவு வர வாய்ப்பு உள்ளது என்றார்.


Next Story