பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், ஜெய்வாபாய் பள்ளியில் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், ஜெய்வாபாய் பள்ளியில் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
x
தினத்தந்தி 12 Jun 2021 10:19 PM IST (Updated: 12 Jun 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி கல்லூரிகளில் மாணவமாணவிகள் சேர்க்கை பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், ஜெய்வாபாய் பள்ளியில் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருப்பூர்
பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், ஜெய்வாபாய் பள்ளியில் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மாணவர் சேர்க்கைக்கு அனுமதி
கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மாதத்தில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது முழு ஊரடங்கிற்கு கிடைத்த பலனாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைந்துள்ளது. கடந்த மாதம் தமிழகத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றை முழுவதுமாக குறைக்கும் வகையில் மேலும் ஒரு வாரம், வருகிற 21-ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த முழு ஊரடங்கில் பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் கட்டுப்பாடுகளுடன் திறக்க அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதலாக பல சலுகைகளையும் தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கிடையே பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுத்தம் செய்யும் பணி தீவிரம்
அதாவது பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவ-மாணவிகள் சேர்க்கை தொடர்பாக பணிகள் மற்றும் அலுவலக, நிர்வாக பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நாளை (திங்கட்கிழமை) முதல் இந்த பணிகள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தொடங்க உள்ளன. இதனால் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
அதன்படி திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று சுத்தம் செய்யும் பணி நடந்தது. சுகாதார பணியாளர்கள் பள்ளி மற்றும் அலுவலக பகுதிகளில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். நாளை முதல் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை பணிகள் நடக்க உள்ளது.

Next Story