கடலூர் அருகே நகைக்காக தாய், மகளை கொன்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கடலூர் அருகே நகைக்காக தாய், மகளை கொன்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கடலூர்,
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி அருகே நோணாங்குப்பத்தை சேர்ந்தவர் சிதம்பரம் இவருடைய மனைவி விஜயலட்சுமி என்கிற சாந்தா (வயது 44). இவருடைய மகள் மாதங்கி என்கிற சந்தியா.
இவர்கள் 2 பேரும் கடந்த 1.3.2021 அன்று சிங்கிரிகுடியில் உள்ள ஒருவரது வயல்வெளியில் நின்ற போது, புதுச்சேரி நைனார் மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஆழ்வார் மகன் இருசப்பன் (49) என்பவர் அவர்களை அடித்து கொலை செய்து, அவர்கள் அணிந்திருந்த நகைகளை கொள்ளை அடித்து சென்றார்.
இது பற்றி ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருசப்பனை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இருசப்பன் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் போலீஸ் நிலைய எல்லை பகுதியில், நகைக்காக கொலை செய்து, அந்த வழக்கில் தண்டனை பெற்றவர்.
கைது
இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் வகையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து இருசப்பனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார். அதன்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார், இருசப்பனை குண்டர் சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.
Related Tags :
Next Story