பல்லடம் அருகே ஒரே இடத்தை 2 பேர் வாங்கியதால் தகராறு


பல்லடம் அருகே ஒரே இடத்தை 2 பேர் வாங்கியதால் தகராறு
x
தினத்தந்தி 12 Jun 2021 10:31 PM IST (Updated: 12 Jun 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே ஒரே இடத்தை 2 பேர் வாங்கியதால் தகராறு

பல்லடம்,
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஊராட்சி மஞ்சப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 38). இவர் அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன் மகன் மணி(40) என்பவரிடம் 3 சென்ட் இடம் விலைக்கு வாங்கியதாகவும், ஆனால் அந்த இடத்தில் ஆறுமுகம் என்பவர் குடியிருந்து கொண்டு இடத்தை காலி செய்ய மறுப்பதாகவும் கூறப்படுகிறது.. எனவே தான் விலைக்கு வாங்கிய இடத்தை தனக்கு பெற்றுத்தருமாறு, பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். 
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது அந்த இடத்தின் உரிமையாளர் இறந்த வீரப்பன் என்பவரிடம் ஏற்கனவே ஆறுமுகம் இடத்தை விலைக்கு வாங்கியுள்ளார். ஆனால் பத்திரம் பதிவு செய்யப்படவில்லை. ஒரே இடத்தை 2 பேர் வாங்கியதால் தகராறு ஏற்பட்டுள்ளது. 
இதுகுறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story