தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா
தாராபுரம் சப்கலெக்டர் அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா
தாராபுரம்
தாராபுரம், காங்கேயம் ஆகிய 2 தாலுகா உள்ளடங்கிய தாராபுரத்தில் சப்-கலெக்டராக பவன்குமார் கடந்த 2 ஆண்டு காலமாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக அரசு பணி இடமாற்றம் செய்து கடலூர் மாவட்டத்தில் திட்ட இயக்குனராக நியமித்தது.
தனது ஞாபகார்த்தமாக தாராபுரம் சப்- கலெக்டர் அலுவலக வளாகத்தில் சட்டப்பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக 10 மரக்கன்றுகளை சப்-கலெக்டர் பவன்குமார் நட்டு வைத்து பராமரிக்க அலுவலக பணியாளர்களை கேட்டுக்கொண்டார். சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி, மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் கவுரி, மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை அணி செயலாளர் ராயல்முகமத் அஸ்வத் ஆகியோர் மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Related Tags :
Next Story