நீலகிரி மாவட்டத்தில் வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி
நீலகிரி மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட வியாபாரிகள் 160 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இருப்பினும், முன்னுரிமை அடிப்படையில் வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று ஊட்டி படகு இல்லத்தில் வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
முகாமில் படகு இல்லத்தில் உள்புறம் மற்றும் வெளிப்புறத்தில் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருபவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையை காண்பித்த பின்னர் செவிலியர்கள் கோ-வின் என்ற இணையதளத்தில் பதிவு செய்தனர்.
அதன் பின்னர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.45 வயதுக்கு மேற்பட்ட வியாபாரிகள் 160 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி பார்வையிட்டார்.
காந்தல் குருசடி காலனியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அப்பகுதி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. தொற்று அச்சத்தால் பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தடுப்பூசி கிடைக்கும் பட்சத்தில் தொடர்ந்து செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story