காய்கறி வியாபாரிக்கு கொலை மிரட்டல்: ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
காய்கறி வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாப்பாரப்பட்டி,
தர்மபுரி மாவட்டம் பி.எஸ்.அக்ரஹாரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 42). காய்கறி வியாபாரி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் முனியப்பன் (40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த முருகனை, முனியப்பன், இவருடைய தம்பி சின்னபையன் (38), உறவினர் துரை (35) ஆகிய 3 பேரும் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் இண்டூர் போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் முனியப்பன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story