வேட்டவலம் அருகே பெண் மர்மச்சாவு.கற்பழித்து கொலையா? என போலீசார் விசாரணை


வேட்டவலம் அருகே பெண் மர்மச்சாவு.கற்பழித்து கொலையா? என போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Jun 2021 11:03 PM IST (Updated: 12 Jun 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

வேட்டவலம் அருேக பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேட்டவலம்

மர்மமான முறையில் சாவு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா போத்துவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரின் மனைவி விஜயா (வயது 51). இவர், வேட்டவலத்தில் உள்ள வளன்நகர் பகுதியில் தனியாக ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவர், அப்பகுதியில் கடை வைத்து வடை, போண்டா, பஜ்ஜி வியாபாரம் செய்து வந்தார்.

9-ந்தேதி இரவு 11 மணி அளவில் போத்துவாய் கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மகன் செல்வகுமார், சேகரின் மகன் ராஜேஷ் ஆகியோர் விஜயாவின் வீட்டுக்கு குடிபோதையில் வந்து தகராறு செய்து, இருவரும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. 

இருவரும் தாக்கியதில் விஜயாவின் பல் உடைந்தது. அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை எச்சரித்து அனுப்பினர். கடந்த 11-ந்தேதி காலை படுத்த படுக்கையாக வீட்டில் மர்மமான முறையில் விஜயா இறந்து கிடந்தார். 

கற்பழித்து கொலையா?

இதுகுறித்து வேட்டவலம் போலீசில் விஜயாவின் மகன் புகார் செய்தார். மர்மச்சாவாக சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர், கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story