ஆனைமலை அருகே சூதாட்ட கும்பல் கைது
ஆனைமலை அருகே சூதாட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி
ஆனைமலை அருகே சூதாட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சூதாட்டம்
பொள்ளாச்சி அருகே ஆனைமலை அருகே சுள்ளிமேட்டுபதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா, சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சூதாட்டம் நடைபெறுவது தெரியவந்தது. போலீசாரை பார்த்ததும் சூதாட்ட கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி ஓட முயற்சி செய்தனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் ஆனைமலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
11 பேர் கைது
விசாரணையில் சிங்காநல்லூரை சேர்ந்த சிவக்குமாரசாமி (வயது 55), ஆனைமலை ரபிதீன் (42), மாக்கினாம்பட்டி பூபாலகிருஷ்ணன் (35), ஊஞ்சவேலாம்பட்டி சண்முகவேல் (30), மடத்துக்குளம் சந்திரசேகர் (41), உடுமலை மேகநாதன் (29), ஆனைமலை சதீஷ்குமார் (48), அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (51), சூலூர் ராசிபாளையம் சிவசாமி (56), சூலூர் சிக்கந்தர்பாட்சா (25) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 11 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.68 ஆயிரத்து 620 மற்றும் 12 இருசக்கர வாகனங்கள், 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story