ஆழியாறு வனப்பகுதியில் பெண் யானை சாவு


ஆழியாறு வனப்பகுதியில் பெண் யானை சாவு
x

ஆழியாறு வனப்பகுதியில் பெண் யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி

ஆழியாறு வனப்பகுதியில் பெண் யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் யானை சாவு

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆழியாறு வனப்பகுதியில் காட்டு யானை, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த நிலையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் வனப்பகுதிக்குள் ரோந்து சென்றனர். 

அப்போது உருகுளிப்பள்ளம் என்கிற இடத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஒரு பெண் யானை இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்த தகவலின் பேரில் புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் அறிவுரையின் பேரில் உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சரகர் புகழேந்தி, ஆராண்ய அறக்கட்டளை கார்த்திக், வன கால்நடைத்துறை டாக்டர் சுகுமாறன் மற்றும் டாக்டர்கள் கொண்ட குழுவினர் விரைந்து சென்றனர்.

உடல்நலம் பாதிப்பு

இதையடுத்து இறந்த யானையின் உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானைக்கு சுமார் 46 வயது இருக்கும். இந்த யானை இறந்து சுமார் 4 நாட்கள் வரை ஆகலாம். யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்ததில், உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. 

மேலும் யானை கடந்தசில நாட்களாக வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் எதுவும் சாப்பிடாமல் இருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story