விபத்தில் தம்பதி உள்பட 4 பேர் படுகாயம்


விபத்தில் தம்பதி உள்பட 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 12 Jun 2021 11:20 PM IST (Updated: 12 Jun 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேலாயுதம்பாளையம்
கரூர் பெரிய ஆண்டாங்கோவிலை சேர்ந்தவர் சின்ராஜ் (வயது 40). இவரது  மனைவி கோமதி (35), மகன் ஈஸ்வரன் (5), சின்ராஜின் அண்ணன் மகன் தருண் (19). இந்தநிலையில் நேற்று சின்ராஜ் தனது மோட்டார் சைக்கிளில் கோமதி, ஈஸ்வரன், தருண் ஆகியோரை அழைத்து கொண்டு ஜாதகம் பார்ப்பதற்காக சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தளவாப் பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சின்ராஜ் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக தருண் மட்டும் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலின் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story