வாலிபரை அரிவாளால் வெட்ட முயன்ற 3 பேர் கைது


வாலிபரை அரிவாளால் வெட்ட முயன்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2021 11:29 PM IST (Updated: 12 Jun 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

வாலிபரை அரிவாளால் வெட்ட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்

குளித்தலை
குளித்தலை அருகே உள்ள முதலிகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 21). இவர், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (34) என்பவரிடம் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு ரூ.30 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். இது தொடர்பாக இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு ரமேஷ், அவரது உறவினரான திருச்சி மாவட்டம் மேலக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (24) மற்றும் ராஜசேகரின் நண்பரான முதலைப்பட்டி அருகே உள்ள மேலமேடு பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (22) ஆகிய 3 பேரும் சேர்ந்து கவுண்டனூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே இருந்த சங்கரை, திட்டி தாக்கி மறைத்து வைத்திருந்த வாள் போன்ற அரிவாளால் வெட்ட முற்பட்டுள்ளனர். இதுகுறித்து சங்கர் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் ரமேஷ், ராஜசேகர், தினேஷ்குமார் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story