வீடு புகுந்து நகை, பணம் திருடிய 2 பேர் கைது
கயத்தாறு அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள வெள்ளாளன்கோட்டை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். விவசாயி. இவர் வெளியூர் சென்றிருந்தபோது, இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.60 ஆயிரம் மற்றும் மொத்தம் 4 கிராம் எடை கொண்ட 2 மோதிரங்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்று உள்ளனர்.
இதுகுறித்து மாரியப்பன் கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் சந்தேகத்தின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த கீழத்தெரு மணி (50), வடக்குத்தெரு பால்சாமி மகன் இருளப்பசாமி (36) ஆகிய 2 பேைர பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் மாரியப்பன் வீட்டில் நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து கோவில்பட்டி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story