10 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான தாய் கேரளாவில் மீட்பு


10 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான தாய் கேரளாவில் மீட்பு
x
தினத்தந்தி 12 Jun 2021 11:58 PM IST (Updated: 12 Jun 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை அருகே 10 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான தாய் கேரளாவில் மீட்கப்பட்டார்.

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஒரசூர் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைகண்ணு..இவரது மனைவி பாண்டியம்மாள் (வயது 82). இவர்களுக்கு 3 மகன்கள் இருந்தனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியம்மாள் வீட்டு அருகே உள்ள கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வருகிறேன் என்று கூறி சென்றவர் அதன்பிறகு மாயமாகி விட்டார்.
இந்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மனநல காப்பகத்தில் இருந்த பாண்டியம்மாளுக்கு தனது மகன்களை பார்க்க வேண்டுமென இறுதிகால ஆசை ஏற்பட்டது. உடனே காப்பகத்தினர் அங்குள்ள சாரிடி வில்லேஜ் அமைப்புனருடன் தொடர்பு கொண்டனர்.
 இந்த அமைப்பினர் காப்பகத்தில் இருந்த பாண்டியம்மாள் ஊர் விவரங்களை தெரிந்துகொண்டு முதலில் இளையான்குடி தாசில்தார் ஆனந்த்தை தொடர்பு கொண்டனர். தாசில்தார் ஆனந்த் விசாரித்து தேவகோட்டை தாலுகா ஒரசூர் கிராமம் என்கின்ற விவரத்தை கூறி தேவகோட்டை தாசில்தார் ராஜரத்தினத்தை தொடர்பு கொண்டார்.
 தாசில்தார் ராஜரத்தினம் உடனடியாக அந்த கிராமத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவரது மகன் தமிழ்செல்வன்(55) திருவேகம்பத்து ஊரில் இருப்பதாக தகவல் கிைடத்தது. அதன் பேரில் அங்கு சென்று அவர் விசாரித்தனர். பின்னர் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள அவரது சகோதரர் சவுந்தரராஜனுக்கு(50) மாயமான தனது தாய் கேரளாவில் காப்பகத்தில் இருப்பதை தெரிவித்தார். உடனே அவர் கேரளா சென்று தனது தாய் தங்கியிருந்த காப்பகத்தில் அவரை சந்தித்தார். தனது மகனை பார்த்து அவர் கட்டியணைத்து கண்கலங்கினார். பின்னர் அங்கு பிரிவுபசார விழா நடத்தி மூதாட்டியை மகனுடன் காப்பகத்தினர் அனுப்பி வைத்தனர். 10 ஆண்டுக்கு பிறகு தாய் திரும்ப கிடைத்ததால் மகன்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த இளையான்குடி, தேவகோட்டை தாசில்தாருக்கும், கேரள மாநில சாரிடி வில்லேஜ் அமைப்பினரும் அந்த குடும்பத்தினர் நன்றி தெரிவித்து கொண்டன

Next Story