அரக்கோணம் அருகேதண்ணீர் தேடிவந்த மான் ரெயிலில் அடிபட்டு பலி


அரக்கோணம் அருகேதண்ணீர் தேடிவந்த மான் ரெயிலில் அடிபட்டு பலி
x
தினத்தந்தி 13 Jun 2021 12:00 AM IST (Updated: 13 Jun 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகேதண்ணீர் தேடிவந்த மான் ரெயிலில் அடிபட்டு பலி

அரக்கோணம்

அரக்கோணம் - திருப்பதி ரெயில் மார்க்கத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 3 மான்கள் ரெயிலில் அடிப்பட்டு இறந்தன. இந்த நிலையில் நேற்று காலை  காட்டுப்பகுதியில் இருந்து புள்ளி மான் ஒன்று தண்ணீர் தேடி வந்துள்ளது. அப்போது ரெயிலில் அடிபட்டு தண்டவாளம் அருகே இறந்து கிடந்தது.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் இறந்து கிடந்த மான் உடலை மீட்டு ராணிப்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் இறந்த மானின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின்னர் அதேப்பகுதியிலேயே எரித்தனர். தொடர்ந்து மான்கள் இறப்பதை தடுக்க வன துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story