கலவை அருகே ஆந்திர மாநில மதுவிற்ற 3 பேர் கைது
கலவை அருகே ஆந்திர மாநில மதுவிற்ற 3 பேர் கைது
கலவை
கலவையை அடுத்த கலவை புத்தூர் கிராமத்தில் முனுசாமி மகன் சிலம்பரசன், சுப்ரமணியன் மகன் விஜயகுமார் ஆகிய இருவரும் ஆந்திர மாநில மதுபாட்டில்களை வீட்டில் வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதுபற்றி தகவலறிந்த கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி ஆகியோர் சென்று இருவரையும் கைது செய்து, அவர்களிடத்தில் இருந்த 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோன்று கலவையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வீட்டில் இருந்தும் 6 ஆந்திர மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ராஜ்குமார் கைது செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story