கோவில்பட்டி அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


கோவில்பட்டி அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 Jun 2021 12:07 AM IST (Updated: 13 Jun 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்த மூப்பன்பட்டி பஞ்சாயத்து பகுதியில் தெரு விளக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும், கழிவுநீர் ஓடையை சுத்தம் செய்ய வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் சாதி பாகுபாடின்றி முறையாக பணிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மாரீஸ்வரன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மூப்பன்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் (கிராம பஞ்சாயத்து) சீனிவாசன், மண்டல துணை ஆணையாளர் அன்சல், மூப்பன்பட்டி பஞ்சாயத்து தலைவர் லிங்கேஸ்வரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில், அடிப்படை வசதிகளை முறையாக ஆய்வு செய்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பதிவேடுகளில் பதிவான பெயர்களின் வரிசைப்படி பாகுபாடின்றி அனைவருக்கும் முறையாக பணிகள் வழங்கப்படும் என கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர். 

Next Story