களக்காட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 5 பேர் கைது


களக்காட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 13 Jun 2021 12:44 AM IST (Updated: 13 Jun 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

களக்காட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

களக்காடு:
களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வடமலைசமுத்திரம் சம்மன்குளம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மரத்தடியில் வடமலைசமுத்திரம் சங்கர்நகரை சேர்ந்த முத்துசாமி (வயது 47), பத்மநேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (49), பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முத்துராமன் (62), பாறையடி தெருவை சேர்ந்த அருணாசலம் (45), கிருஷ்ணன் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (41) ஆகிய 5 பேரும் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த போலீசார், 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.250 பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story