சிறுமியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் போக்சோவில் கைது


சிறுமியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 13 Jun 2021 12:47 AM IST (Updated: 13 Jun 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த ஆண்டிமடம் அருகே உள்ள அணிக்குதித்தான் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது 24). பெயிண்டரான இவர், பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியை தைலமரக்காட்டிற்கு ரஞ்சித்குமார் அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால், பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை டாக்டர் பரிசோதித்தபோது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது பற்றிய தகவல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்தது. இதையடுத்து அலுவலர்களின் உதவியோடு ரஞ்சித்குமார் மீது சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் ரஞ்சித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story