நெல்லையில் ஊரடங்கை மீறியதாக 13 பேர் மீது வழக்கு
நெல்லையில் ஊரடங்கை மீறியதாக 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு விதிகளை மீறுவோர்கள், முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாத 613 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத 11 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story