86 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்


86 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 13 Jun 2021 1:08 AM IST (Updated: 13 Jun 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி தொகுதியில் 86 பெண்களுக்கு தாலிக்கு தங்கத்தை, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

இட்டமொழி:
தமிழக அரசின் திருமண உதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த, நாங்குநேரி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 86 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
களக்காடு யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 40 பேருக்கு தாலிக்கு தங்கத்தை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார். அதேபோல் நாங்குநேரி யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 46 பேருக்கு தாலிக்கு தங்கத்தை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர்கள் பிரம்மநாயகம் (களக்காடு), பொன்னுலட்சுமி (நாங்குநேரி), நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, நகர காங்கிரஸ் தலைவர்கள் சுடலைக்கண்ணு, ஜார்ஜ் வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story