தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி; இன்று நடக்கிறது


தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி; இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 13 Jun 2021 1:25 AM IST (Updated: 13 Jun 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று நடக்கிறது.

தென்காசி:
தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொரோனா தடுப்பூசி 18 வயது முதல் அனைத்து வயதினருக்கும் போடப்படுகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போட வரும் நபர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டை கொண்டுவர வேண்டும். முக கவசம் அணிந்து சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும்.
இந்த தகவலை தென்காசி அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் தெரிவித்து உள்ளார்.

Next Story