மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்


மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Jun 2021 1:28 AM IST (Updated: 13 Jun 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

திருச்சுழி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காரியாபட்டி, 
 திருச்சுழி அருகே எஸ்.மீனாட்சிபுரம் பகுதியில் ஊரடங்கை பயன்படுத்தி ஓடையில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளப்பட்டு வருவதாக வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த இடத்திற்கு வருவாய்த்துறையினர் விரைந்து சென்றனர். வருவாய்த்துறையினரை பார்த்தவுடன் மணல் அள்ளிய மர்மநபர்கள் டிராக்டரை விட்டு விட்டு அங்கிருந்து ஓடி விட்டனர். பின்னர் வருவாய்த்துறையினர் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து திருச்சுழி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். காரேனந்தல் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story