ஊரடங்கு விதிகளை மீறிய கடைகளுக்கு ‘சீல்’


ஊரடங்கு விதிகளை மீறிய கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 13 Jun 2021 1:28 AM IST (Updated: 13 Jun 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் ஊரடங்கு விதிகளை மீறிய கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை பகுதிகளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஜவுளிக்கடைகளில் வியாபாரம் செய்து வருவதாக தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய் அலுவலர்கள் நேரடியாக சென்றனர். பட்டாபிராமர் கோவில் பகுதியில் உள்ள 2 ஜவுளி கடைகளில் விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்தால் 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதே போன்று புதிய பஸ் நிலையம் பகுதியில் 2 செருப்பு கடைகளுக்கு ரூ 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. திருச்சுழி ரோட்டில் உள்ள விதிமுறைகளை மீறி பொருட்கள் விற்பனை செய்த பர்னிச்சர் கடைக்கு பூட்டு போடப்பட்டது.

Next Story