179 ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
ஸ்ரீவில்லிபுத்தூரில் 179 ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்து தடுப்பூசி போட்டனர். ஆசிரியர்களுக்கான இந்த முகாமை சுகாதார துறை துணை இயக்குனர் கலு சிவலிங்கம், நகராட்சி கமிஷனர் மல்லிகா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சபரிஷ், நகராட்சி சுகாதார துறை ஆய்வாளர்கள் பிரமநாயகம், பழனி குரு ஆகியோர் பார்வையிட்டனர். முகாமில் 179 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அதேபோல வத்திராயிருப்பில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் வத்திராயிருப்பு வட்டார மருத்துவ அலுவலர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் டாக்டர் செல்வி மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story