கோவில் சுவர் சேதம்
வத்திராயிருப்பில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் கோவில் சுவர் சேதமானது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பில் இருந்து அழகாபுரி செல்லும் சாலையில் உள்ள தாணிப்பாறை விலக்கு அருகே அரசமரத்து பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 200 ஆண்டு பழமையான அரசமரம் உள்ளது. நேற்று வத்திராயிருப்பு பகுதியில் அடித்த பலத்த காற்றால் மரத்தின் கிளை கோவில் சுவற்றின் மேல் விழுந்ததால் கோவில் முன்புறம் உள்ள ஆர்ச் முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து வத்திராயிருப்பு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மரம் அறுக்கும் எந்திரத்தின் மூலம் மரத்தை வெட்டி எடுத்து அப்புறப்படுத்தினர். சாலையில் மரம் விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மரம் விழும்போது சாலையில் வாகனங்கள் செல்லாமல் இருந்ததால் அப்பகுதியில் பெரிய அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story