259 பேருக்கு தாலிக்கு தங்கம்; பழனி நாடார் எம்.எல்.ஏ. வழங்கினார்
பாவூர்சத்திரத்தில் 259 பேருக்கு தாலிக்கு தங்கத்தை, பழனி நாடார் எம்.எல்.ஏ. வழங்கினார்
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் யூனியன் கூட்ட அரங்கில் தாலிக்கு தங்கம், திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. யூனியன் ஆணையாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். கூடுதல் ஆணையாளர் திலகராஜ் முன்னிலை வகித்தார். எஸ்.பழனி நாடார் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 2018, 2019 வரையிலான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு படித்த பெண்கள் 61 பேருக்கும், பிளஸ்-2 வரை படித்த பெண்கள் 196 பேருக்கும், கலப்பு திருமண உதவி திட்டத்தில் ஒரு நபருக்கும், விதவை மகள் திருமண உதவி திட்டத்தில் ஒருவருக்கும் என மொத்தம் 259 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார். மேலும் திருநங்கைகள் 3 பேருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரத்தையும் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சங்கர நாராயணன், தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் மற்றும் யூனியன் அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story